நிறைய பேர் வேப்ப மரம் என்றால் சாமி என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் கசப்பு நிறைந்த வேப்பிலைகளில் மருத்துவகுணங்கள் அதிகம் உள்ளது. பாட்டி வைத்தியத்தில் நோய் தீர்ப்பதில் முதன்மையான இடத்தில் வேப்பிலை உள்ளது. வேம்பிள் இலை, காய்,கனி அனைத்தும் மருத்துவத்தில் சிறந்து விளங்குகிறது.
அக்காலம் முதல் இக்காலம் வரை நாம் மஞ்சள் மற்றும் வேப்பிலையை கிருமிநாசினியாக பயன்படுத்தி வருகிறோம். நம் வயிற்றுக்குள் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் சிறிதளவு வேப்பிலை விழுதை சாப்பிட்டால் போதும், அந்த கிருமிகள் அனைத்தும் அழியும்.
வேப்பிலை உங்களது உடலை சுத்தம் செய்கிறது. வேப்பங்குச்சி மிகவும் நல்லது, உங்களுக்கு ஒன்று தெரியுமா? அது பலரை பிரமையிலிருந்து தட்டி எழுப்புகிறது! உங்களுக்கு இது தெரிந்திருக்கலாம். கிராமப்புறங்களில் யாராவது வினோதமாகவும், பிசாசு பிடித்தது போலவும் நடந்துகொண்டால், இந்த வேப்பங்குச்சியால் அடித்தே, பிசாசை விரட்டிவிடுவார்கள்.
ஏதாவது தொற்று நோய் ஏற்பட்டால் வேப்பிலைகளைப் பரப்பி அதன்மீது படுக்கவைப்பார்கள். ஏனெனில் வேப்பிலை மிகுந்த சக்தியூட்டக்கூடியது என்பதுடன் அது உடலை சுத்திகரிக்கவும் செய்கிறது. வேப்ப இலை அற்புத மருத்துவ குணங்களையும், பிராண சக்தியின் பலமான அதிர்வுகளையும் கொண்டது. மேலும் உங்களிடமிருக்கும் எந்தப் பிசாசையும் விரட்டி விடும் அளவிற்குப் போதுமான கசப்பையும் கொண்டுள்ளது.
தலைவலி
வேப்பிலை கசாயம் கிருமிகளைக் கொன்று காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாகும். தலையில் நீர் கோர்த்து தலைவலியால் அவதிபடுபவர்கள் இந்த வேப்பிலை மற்று மஞ்சள் சேர்த்து கொதிக்க வைத்து ஆவிபிடித்தால் தலைவலி குணமாகும்.
வயிற்று பிரச்சனைகள்
கொழுந்து வேப்பிலைகள் மற்றும் வேப்பம் பூக்களை பச்சடி செய்தும் ரசமாக வைத்தும் உட்கொள்ள செரிமான கோளாறுகள் நீங்கும். குடல்களில் பூச்சி புழுக்களை போக்கும். மற்றும் வயிற்றில் ஏற்பட்டுள்ள புண்களை ஆற்றும்.
அம்மை நோய்
கோடைகாலங்களில் அதிக உஷ்ணத்தாலும், சில கிருமிகளின் தொற்றாலும் சிலருக்கு தட்டம்மை, பெரியம்மை, சின்னம்மை போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. இத்தகைய காலங்களில் வேப்பிலைகளை நன்கு அரைத்து, உடல் முழுவதும் பூசி, சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு குளிர்ந்த நீரில் மஞ்சள் மற்றும் வேப்பிலைகளை ஊற வைத்து, அந்த நீரை ஊற்றி குளிக்க அம்மை குணமாகும்.
பித்தம்
வேப்ப மரத்திலிருந்து உதிர்ந்த பூக்களைச் சேகரித்து வைத்துக் கொண்டு ஒரு வருடம் கழித்து இந்தப் பூவைக் கொண்டு ரசம் வைப்பார்கள். இந்த வேப்பம் பூ ரசம் பித்த சம்பத்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும்.
நீரிழிவு நோய்
நீரிழிவு நோய் என்பது ஒரு நாள்பட்ட நோயாகும். இன்று வீட்டில் ஒருவருக்கு நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளது. நம் வாழ்க்கை சூழலும், உணவு பழக்க முறை மாறியதில், 35 வயதை கடந்தவுடன் பெரும்பாலான மக்கள் இந்நோயால் பாதிக்கப்படுகிறார்கள். பிறந்த குழந்தைகளுக்குக் கூட நீரிழிவு நோய் ஏற்படுகிறது.
வேர்க்குரு, அரிப்பு, படை
கோடைகாலத்தில் வேர்க்குரு, அரிப்பு, படை போன்ற வகையான நோய்களுக்கு வேப்பிலை மற்றும் அதன் பூக்கள் ஆகியவற்றை அரைத்து வாரத்திற்கு ஒரு முறை உடல் முழுவதும் பூசி குளித்து வந்தால் தோல் சம்பந்தமான வியாதிகள் குணமாகும்.
புற்று நோய்
வேப்பிலைகளில் இருக்கும் காரத்தன்மை புற்று நோய் செல்களை அழிக்கும் திறன் கொண்டது. சிறிது வேப்பிலை கொழுந்துகளை நன்றாக அரைத்து, மாதுளம் பழச்சாற்றுடன் கலந்து அருந்தி வருபவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகும். புற்று நோய் பாதிப்பிலிருந்து காக்கும். அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு வரும் விந்தக புற்று மற்றும் பெண்களுக்கு வரும் கருப்பை புற்றிலிருந்து காக்கும்.