Loading...
பழங்காலம் தொட்டே, தயிரானது ஜீரணம் மற்றும் அமில எதிர்விளைவுகளில் இருந்து நிவாரணம் பெற நல்ல பயனுள்ள பொருளாகும் என்று நம்பப்பட்டது.
ஒரு குவளை தயிரில் 100-150 கலோரிகள், 3.5 சதவீதம் கொழுப்பு, 20 சதவீதம் சர்க்கரை, 8 முதல் 10 சதவீதம் புரோட்டீன் ஆகியவை இருக்கும்.
இதே ஒரு குவளை தயிரை நீங்கள் உண்ணும் போது, தினசரி உங்கள் உடலுக்கு தேவையான 20 சதவீத விட்டமின் டி ஊட்டச்சத்தும், 20 சதவீத கால்சியமும் கிடைக்கிறது.
Loading...
தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கிறது. தினசரி தயிரை உண்டு வந்தால் வயிற்றில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் அழிக்கப்படுகின்றன.
தயிரில் உள்ள சத்துக்களை உடல் மிக எளிதாக கிரகித்துக் கொள்ளும். தயிரை தொடர்ந்து உண்டு வந்தால் வயிற்று உபாதைகள்கள் சரியாகும்.
Loading...