இந்தியாவில் நடைபெற்று வரும் முஷ்டாக் அலி டி20 தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் மகனின் பந்து வீச்சி சூர்யகுமார் யாதவ் 21 ஓட்டங்கள் விளாசியதுடம், 47 பந்தில் சதம் அடித்து மிரட்டியுள்ளார்.
அடுத்தாண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் முஷ்டாக் அலி டி20 போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கு தயாராகும் வகையில் அங்கு பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது.
அதன் படி நேற்று பி மற்றும் டி அணிகளுக்கிடையே போட்டி நடைபெற்றது. இதில் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ் தலைவராகவும், டி அணிக்கு யாஹஸ்வி ஜெய்ஸ்வாலும் தலைவராகவும் பொறுப்பேற்றிருந்தனர்.
இதில் பி அணியின் கேப்டன் சூர்யகுமார் 3-வது வீரராகக் களமிறங்கி டி அணியின் பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கினார்.
அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 47 பந்துகளில் 120 ஓட்டங்கள் சேர்த்தார். இதில் 10 பவுண்டரி, 9 சிக்ஸர் அடங்கும்.
குறிப்பாக சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் வீசிய 13-வது ஓவரில் சிஸ்கர், பவுண்டரி என 21 ஓட்டங்களை சூர்யகுமார் யாதவ் விளாசினார்.
சூர்யகுமாரின் அதிரடியான ஆட்டத்தால் பி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 213 ஓட்டங்கள் விளாசியது. அர்ஜூன் டெண்டுல்கர் 4 ஓவர்கள் வீசி 33 ஓட்டங்கள் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் சூர்யகுமார் தலைமையிலான பி அணி வெற்றி பெற்றது.