தமிழகத்தில் பெற்றோர் இல்லாத 16 வயது சிறுமியை 600 பேர் சீரழித்த கொடூர சம்பவத்தின் பின்னணி வெளியாகியுள்ளது.
மதுரையை சேர்ந்த ஒரு 16 வயது சிறுமி தவறான தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் விஐபி கார்டன் பகுதிக்கு சென்ற பொலிசார் சிறுமியை மீட்டனர்.
அப்போது உடன் இருந்த சரவணபிரபு என்ற புரோக்கரை கைது செய்தனர். சிறுமியிடம் நடத்திய விசாரணையில் சிறுமியை 600 பேர் சீரழித்த கொடுமை வெளிச்சத்திற்கு வந்தது.
அந்த சிறுமிக்கு 10 வயதாக இருக்கும் போது தாய் தந்தையை இழந்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு உறவினரான ஜெயலட்சுமி என்பவர் படிக்க வைப்பதாக கூறி அழைத்து சென்றுள்ளார்.
அந்த சிறுமி 13 வயதில் பூப்படைந்த நிலையில் அப்போது முதல் அவரை மிரட்டி தவறான தொழிலில் தள்ளிய ஜெயலட்சுமி, சிறுமியை பல புரோக்கர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு கைமாற்றி விட்டுள்ளார்.
கடந்த 3ஆண்டுகளில் மட்டும் ஜெயலட்சுமி தனது தோழிகளான அனார்கலி, சுமதி, ஐஸ் சந்திரா, தங்கம், ஆட்டோ ஓட்டுனர்கள் சரவணபிரபு சின்னதம்பி ஆகியோர் உதவியுடன் மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்ட மாநிலங்களை சேர்ந்த நபர்களிடம் சிறுமியை மாதவாடகைக்கு விட்டுள்ளார்.
இதனையடுத்து உறவினரான ஜெயலட்சுமி, சுமதி, ஐஸ் சந்திரா அனார்கலி தங்கம் உள்ளிட்ட 5 பெண் முகவர்களையும் அதிரடியாக கைது செய்தனர்.
ஓட்டுனர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை என 600க்கும் மேற்பட்டோர் சிறுமியை சீரழித்தவர்கள் பட்டியலில் உள்ள நிலையில் அனைவர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும் என்று பொலிசார் கூறியுள்ளனர்.
இதற்க்கிடையே பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கடுமையான அத்துமீறல்களால் சிறுமியின் உடல் 70 வயது மூதாட்டி போல தளர்வடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்திள்ளனர். அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.