ஹோமாகம, மாகும்புர பகுதியில் தனது கள்ளக்காதலனை கழுத்தை நெரித்தே பெண்ணொருவர் கொலை செய்துள்ளார். கொலையை செய்த பின் பொலிஸ் நிலையத்தில் சணடைந்துள்ளார்.
கெக்கிராவ பகுதியை சேர்ந்த 41 வயதான திருமணமான பெண்ணே இந்த கொலையை செய்துள்ளார். ஹோமாகம பகுதியில் தனியார் நிறுவனத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றி வருகிறார்.
நேற்று (24) இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் உச்சமடைந்த பின்னர், கையடக்க தொலைபேசியின் சார்ஜர் வயரினால் 26 வயதான இளைஞனின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
அந்த பெண் திருமணமானவர். பின்னர் கணவர் பிரிந்து சென்று விட்டார். மாகும்புர பகுதியில் அறையொன்றில் தங்கியிருக்கிறார். அவருக்கும், உயிரிழந்த இளைஞனிற்குமிடையில் 5 வருடமாக கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. அவரது அறைக்கு இளைஞன் அடிக்கடி வந்து செல்கிறார்.
அந்த பெண்ணை நிர்வாண நிலையில் இளைஞன் புகைப்படங்கள் எடுத்துள்ளார். அதை அவர் கையடக்க தொலைபேசியில் சேமித்து வைத்திருந்தது குறித்து, இருவருக்குமிடையில் நேற்று முன்தினமும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
நேற்று அந்த புகைப்படங்களை தனது நண்பரிற்கு அந்த இளைஞன் அனுப்பியுள்ளார்.
இதையறிந்த பெண் கோபமடைந்துள்ளார். இதனால் இருவருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இதன்போது, கையடக்க தொலைபேசியின் சார்ஜரினால் இளைஞனின் கழுத்தை இறுக்கியுள்ளார். சுமார் அரை மணித்தியாலங்கள் அவர் கழுத்தை இறுக்கி வைத்திருந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
பின்னர், பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.