கொரோனா பெருந்தொற்றையடுத்து இணையவழியில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதற்காக மாணவர்கள் பலர் ஸ்மார்ட் தொலைபேசிகளை பாவிக்க தொடங்கினர்.
இதன்மூலம் கல்வியை வளர்த்துக் கொண்ட மாணவர்கள் பலர். கல்வியை வளர்க்காமல், கர்ப்பத்தை வளர்த்த மாணவி பற்றிய செய்தி இது.
15 வயதான பாடசாலை மாணவி கர்ப்பமாக இருப்பது அடையாளம் காணப்பட்டதையடுத்து, அவரது காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகரகம பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இணையவழி கற்கைக்காக 4 மாதங்களின் முன்னர் மாணவிக்கு ஸ்மார்ட் தொலைபேசியை வாங்கிக் கொடுத்துள்ளார் தந்தை.
இந்த தொலைபேசி வழியாக பேஸ்புக் கணக்கொன்றை மாணவி உருவாக்கியுள்ளார். இதன்போது, இளைஞன் ஒருவருடன் நட்பாகியுள்ளார். பின்னர் இருவரும் காதலில் விழுந்தனர்.
மாணவியை சந்திப்பதற்கு இளைஞன் பல முறை முயன்றபோதும், மாணவி வெளியில் செல்லும் சந்தர்ப்பங்களின்மையால் அது சாத்தியப்படவில்லை.
ஓகஸ்ட் 1ஆம் திகதி தனியார் கல்வி நிலையமொன்றிற்கு மாணவி சென்றிருந்தார். ஆனால் அன்று கல்வி நடவடிக்கை இடம்பெறவில்லை. இதையடுத்து, தனது காதலனிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அங்கு சென்ற இளைஞன், மாணவியை உஸ்வெதகெயாவ பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றார். இருவரும் சுமார் மூன்று நாட்களாக அந்த வீட்டில் தங்கியிருந்தனர். அங்கு காதலனால் அவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டார்.
இதற்குள் மாணவியை காணவில்லையென மாணவியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டனர்.
பின்னர், மாணவியும், காதலனும் ஒன்றாக மாணவியின் வீட்டிற்கு வந்துள்ளனர். இதன்போது, மாணவியின் பெற்றோர் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டதையடுத்து, இருவரும் அங்கிருந்து வெளியேறினர்.
பமுனுவ புறநகர் பகுதியிலுள்ள வீட்டில் இருவரும் தங்கியுள்ளனர்.
அங்கு தங்கிய சில நாட்களிலேயே மாணவி கர்ப்பமாகியது தெரிய வந்தது. இதையடுத்து, காதலர்களிற்குள் முரண்பாடு ஏற்பட்டது. இதன்போது, மாணவியை பலமுறை காதலன் பலமாக தாக்கியுள்ளார்.
பேஸ்புக் காதலனின் அடிதாங்க முடியாமல், காதலனிற்கு தெரியாமல் தனது பெற்றோரிடம் சென்றுள்ளார் மாணவி. இதையடுத்து, மாணவியை அழைத்து சென்று பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் முறையிட்டனர்.
பேஸ்புக் காதலன் கைது செய்யப்பட்டு நுகேகொட நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.