அரசாங்கத்துக்குள் இரண்டு நிலைப்பாடுகளை கொண்ட குழுக்கள் இருக்கின்றபோதும் நல்லாட்சி அரசாங்கம் தமது ஐந்தாண்டு காலத்தை தொடரும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.
தம்மை நேற்று சந்தித்த ஐக்கிய தேசியக்கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
அரசாங்கத்தில் உள்ள இரண்டு கட்சிகளும் தமக்கிடையில் உள்ள பிரச்சினைகளை பேசிதீர்த்துக்கொள்ளமுடியும் என்றும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை உள்ளுராட்சி மாகாணசபைகள் ராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜெயரத்னவின் பதவி விலகல் விடயத்தை பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் (ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி) மஹிந்த தரப்புடன் இணைந்துஆட்சியை கவிழ்க்கப்போகிறார்கள் என்ற செய்தி வெளியான நிலையிலேயே இந்த சந்திப்புநிகழ்ந்துள்ளது.