தேங்காய் எண்ணெயில் ஏராளமான சத்துக்கள் இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அதற்காக இந்த எண்ணெய் அனைத்துவிதமான பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வளிக்கும் என்று கூற முடியாது. தேங்காய் எண்ணெயாலும் ஒருசில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்காது. ஆயில் புல்லிங்: பழங்காலத்தில் இருந்து வாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆயுர்வேதம் ஆயில் புல்லிங் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் ஆயில் புல்லிங் செய்வதற்கு தேங்காய் எண்ணெய் சிறந்ததாக இருக்காது. மாறாக நல்லெண்ணெய் கொண்டு ஆயில் புல்லிங் செய்தால், அது வாயில் உள்ள பாக்டீரியாக்களை வேகமாகக் குறைக்கும். சன் ஸ்க்ரீன்: வெயிலில் இருந்து சருமத்திற்கு நல்ல பாதுகாப்பை தேங்காய் எண்ணெய் வழங்குவது உண்மை தான். ஆனால் அக்காலத்தில் வேண்டுமானால், இது சரியாக இருக்கும். ஏனெனில் அக்காலத்தில் ஓசோன் படலம் மிதமான அளவில் சூரியக்கதிர்களை வெளியிட்டது. தற்போதோ சூரியக்கதிர்கள் நேரடியாக சருமத்தை தாக்குவதால், தேங்காய் எண்ணெயால் போதிய பாதுகாப்பை வழங்க முடியாது. ஏனெனில் தேங்காய் எண்ணெயில் SPF 8 தான் உள்ளது. ஆனால் சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்க குறைந்தது SPF 30 இருக்க வேண்டும். குளியல்: குளிக்கும் நீரில் தேங்காய் எண்ணெயை சில துளிகள் சேர்த்துக் கொண்டால், சருமம் வறட்சி அடையாமல் தான் இருக்கும். ஆனால் இது சருமத்தில் எண்ணெயை அதிகமாக வழியச் செய்யும். அதுமட்டுமின்றி, குளிக்கும் போது வழுக்கி கீழே விழவும் வாய்ப்புக்கள் அதிகரிக்கும். வெட்டுக் காயங்கள்: வெட்டுக் காயங்கள் குணமாவதற்கு பலரும் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவோம். ஆனால் இப்படி வெட்டு ஏற்பட்ட உடனேயே தேங்காய் எண்ணெயை பயன்படுத்தினால், மிகுந்த எரிச்சலை சந்திக்கக்கூடும். ஆகவே உடனே தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதைத் தவிர்த்து, காயம் ஆறும் நிலையில் தேங்காய் எண்ணெயை உபயோகித்தால், விரைவில் காயம் ஆறிவிடும். பொரிப்பதற்கு: உணவுகளை டீப் ப்ரை செய்வதற்கு தூய்மையாக்கப்படாத தேங்காய் எண்ணெயைக் கொண்டு பொரிக்காதீர்கள். நன்கு சுத்திகரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் கொண்டு உணவுப் பொருட்களை ப்ரை செய்வதே சிறந்தது.
எப்போதெல்லாம் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தக்கூடாது என தெரியுமா?
Loading...
Loading...
Loading...