Loading...
காலி பத்தேகம சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா தொற்றுக்குள்ளான 7 பேர் நேற்று முன்தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பத்தேகம பிரதேசத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்றியதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் இந்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
முதலாவதாக அடையாளம் காணப்பட்ட நபர் கொள்ளுபிட்டி தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய பத்தேகம பிரதேசத்தை சேர்ந்த நபராகும்.
Loading...
அதற்கமைய தொற்றுக்குள்ளான 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 39 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இருந்த சென்றவராலேயே கிராமத்தில் பலருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
Loading...