தமிழ் சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருபவர் நடிகை த்ரிஷா. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான இவரைப்பற்றி பல்வேறு கிசுகிசுக்கள் எப்போதும் வந்தவண்ணம் இருக்கும்.
ஹீரோக்களுடன் சேர்த்து கிசுகிசுக்கப்படும் நடிகைகளில் இவரும் ஒருவர். சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரிப்பாளர் ஒருவருடன் திருமணம் என்று நிச்சயதார்த்தம் வரை சென்று பின்னர் திருமணம் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் திருமணம் என்று கேள்வி கேட்டாலே இப்போது நடிப்பில் மட்டுமே கவனம் என்ற பதிலை சொல்லிவருகிறார்.
அதுமட்டுமல்லாமல் தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நல்ல ரோல்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறார். நாளை புத்தாண்டு பிறக்கும் நிலையில் த்ரிஷா தனது ஆண் மற்றும் பெண் நண்பர்களுடன் கேளிக்கை விடுதியில் ஆடுவது போன்ற வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.