கொரோனாப் பரவல் ஆபத்து இருப்பதை சுட்டிக்காட்டி, புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்குமாறு ஜப்பான் மக்களிடம் அந்நாட்டு பிரதமர் யோஷிஹிடே சுகா கோரிக்கை விடுத்துள்ளார்.
தொலைக்காட்சி மூலம் உரை நிகழ்த்திய அவர், இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனாப் பரவலை தடுக்க புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் ஈடுபட வேண்டாம் எனவும், புத்தாண்டு விடுமுறையை அமைதியான முறையில் வீட்டிலேயே குடும்பத்தினருடன் கழிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அத்துடன், கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் வைத்தியசாலைகளை மேம்படுத்த நிதி ஒதுக்குவதாகவும் அவர் இதன்போது அறிவித்துள்ளார்.
இதேவேளை, ஜப்பானில் 02 இலட்சத்து 13 ஆயிரத்து 547 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 03 ஆயிரத்து 567 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 50 பேர் உயிரிழந்துள்ளனர்.