வவுனியாவை சேர்ந்த வயோதிப பெண் கொரோனா தொற்றினால் இன்று சாவடைந்துள்ளார்.
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 60 வயதான பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதிசெய்யப்பட்டது.
உளுக்குளம் பகுதியை சேர்ந்த வயோதிபப் பெண் கடந்த இருதினங்களிற்கு முன்பாக வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை ஒன்றிற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டு அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. பரிசோதனை முடிவுகளின் பிரகாரம் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
குறித்த பெண்மணி இன்று வவுனியா வைத்தியசாலையில் இருந்து அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
எனினும் அவர் சிகிச்சை பலனின்றி சாவடைந்துள்ளார். அவருக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.