Loading...
மனிதர்களுக்கு உள்ள குணங்களை போன்று ஒவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு தன்மை உள்ளது. அதன் அடிப்படையில் எந்த நிறங்களுக்கு எவ்வித தன்மை உள்ளது என்பதை பற்றி பார்க்கலாம்.
Loading...
நிறம் மற்றும் அதற்கான தன்மைகள் என்ன?
- பச்சை நிறம் மனதிற்கு தன்னம்பிக்கையையும், எதையும் தாங்கும் மனோபலத்தையும் தருகிறது.
- வெள்ளை ஒரு தூய்மையான நிறம். இந்நிறம் மனதிற்கு அமைதியை கொடுத்து மனதிற்குள் உள்ள தெய்வீக குணங்களை வெளிப்படுத்தும்.
- மஞ்சள் நிறம் அனைவரையும் வசீகரிக்கும் சக்தி கொண்டது. எழுச்சி மற்றும் மங்கலத்தின் அடையாளமாக விளங்கும் மஞ்சள் நிறம் அனைவரையும் ஈர்க்கும் சக்தி கொண்டது.
- நீல நிறம் மகிழ்ச்சியின் தூதனாக கருதப்படுகிறது. எனவே இந்த நீல நிறத்தினை விரும்புவர்கள் எப்போது, மகிழ்ச்சியானவர்கள்.
- காக்கி நிறம் சேவை உணர்வை தூண்டக் கூடியது. அதனால் தான் பெரும்பாலும் பள்ளி சீருடைகள் காக்கி நிறத்தில் உள்ளது.
- காவி நிறமானது மனதை ஒருநிலை படுத்துவதற்கு உதவுகிறது.
- சிவப்பு உக்கிரமான நிறமாகவும், கருப்பு வருத்தம், சோகம், எதிர்ப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் நிறமாகும்.
- இளஞ்சிவப்பு, பிங்க் நிறம் மென்மையான உணர்வை தூண்டும். அதாவது காதல், கருணை ஆகியவற்றை குறிக்கிறது.
- கருஞ்சிவப்பு நிறமானது மனோபலம் மற்றும் தைரியத்தினை குறிக்கிறது.
- இளம்பச்சை நிறமானது புத்துணர்ச்சிகளை கொடுத்து, புதுமையான எண்ணங்களை மனதில் உண்டாக்க உதவுகிறது.
Loading...