இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினுக்கு 2016 ஆம் ஆண்டு மிகவும் சோகமாக இருந்துள்ளது.
இந்திய அணிக்கு பலமுறை வெற்றிகளை தேடித்தந்தவர் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின். சில தினங்களுக்கு முன்னர் கூட ஐசிசி இந்தாண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் அஸ்வின் என்று அறிவித்தது.
இதனால் மகிழ்ச்சியில் இருந்த அஸ்வினுக்கு, 2016 முடிந்தவுடன் சில சோகமான நிகழ்வுகளை பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
அஸ்வின் அண்மையில் கிரிக்கெட் அகாடமி ஒன்றை துவங்கியுள்ளார். இதில் முக்கிய நபர் மற்றும் பயிற்சியாளராக இருந்தவர் ரமேஷ்.
இவர் அஸ்வினுக்கு மிகவும் நெருக்கமானவர், பயிற்சியாளர் ரமேசுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார்.
இவரது இழப்பை தாங்கமுடியாமல் அஸ்வின் மிகவும் சோகத்தில் இருந்துள்ளார். இதை அஸ்வின் தன்னுடைய இன்ஸ்டிராகிராமில் மிகுந்த வலியுடன் பதிவேற்றம் செய்துள்ளார்.