பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் நிறுவனம் தயாரித்துள்ள கொரோான தடுப்பூசிக்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு ஓரிரு நாளில் அனுமதி அளிப்பது குறித்து மத்திய அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. இதன்படி ஒக்ஸ்போர்டு நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பு மருந்து திருப்திகரமான முடிவுகளை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசி மருந்தை இந்தியாவில் புனேவில் உள்ள சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது. இது தொடர்பான தகவல்களை மத்திய அரசுக்கு சீரம் நிறுவனம் ஏற்கனவே கொடுத்துள்ளது.
இதன் அடிப்படையில் மத்திய அரசு ஓரிரு நாட்களில் முடிவெடுத்து ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி மருந்துக்கு அனுமதி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றும், நாளையும் நடக்கும் கொரோனா தடுப்பூசி ஒத்திகைக்கு பிறகு அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.