கொவிட்-19 நிவாரணம் மற்றும் அரசாங்க நிதியுதவி சட்டமூலத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
பல நாட்கள் இழுத்தடிப்புக்கு பிறகு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை மார்-எ-லாகோவில் இந்த சட்டமூலத்தில் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
அமெரிக்காவில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிதியுதவி வழங்கவும், அரசாங்க நிறுவனங்களுக்குப் புத்துயிரூட்டத் தேவையான நிதியை வழங்கவும் 2.3 டிரில்லியன் டொலர்கள் ஒதுக்கீடு செய்வதற்கான ஆணையே இதுவாகும்.
எனினும், சில செலவு ஏற்பாடுகள் குறித்து அவர் புகார் தெரிவித்ததையடுத்து, நேரடி கொவிட்-19 கொடுப்பனவுகள் ஒருவருக்கு 600 டொலர்கள் மட்டுமே என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
எனினும் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டிருந்த 600 டொலர்களை, இரண்டாயிரம் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கும்படி ட்ரம்ப் வலியுறுத்தியிருந்தார்.