மனைவிக்கும் கணவரிற்குமிடையே பிரச்சினைகள் அதிகரித்து வந்த நிலையில் தன்னால் இனி மனைவியுடன் ஒத்துவாழ முடியாது என்ற நிலைக்கு வந்த இளைஞரொருவர் தீர்க்கமான முடிவொன்றை எடுத்தார்.
இரண்டு பேரும் பிரிந்து வாழ்வோம் பிள்ளைகளை நீ வைத்திரு. நான் விவாகரத்திற்கு விண்ணப்பித்து இந்த திருமண வாழ்விலிருந்து விடைபெறுகின்றேன் எனக் கூறி மனைவியை தனியே அனுப்பி வைத்தார்.
அப்படி அனுப்பி வைத்தவர் மூன்று வாரங்களின் பிறகு மனைவியிடம் சென்று தான் செய்தவைகள் அனைத்துமே தவறு. தயவு செய்து என்னுடன் இணைந்து வாழ். நான் இனிப் பிரிவு பற்றியே கதைக்க மாட்டேன் என மனைவியை அழைத்து வந்துவிட்டார்.
மனைவி அதிர்ச்சியடைந்தாலும் அவருடன் சென்று வாழ ஆரம்பித்து இனிதே இப்போது குடும்பம் நடாத்தி வருகின்றனர் அந்த இளைஞரின் மனமாறுதலிற்கான காரணத்தை மனைவியும் ஏற்றுக் கொண்டார்.
ஆமாம் விவகாரத்துக் கோரி வழக்குத் தாக்கல் செய்யச் சென்ற இளைஞருடன் கதைத்த வழக்கறிஞர் அவருடைய மாத வருமாணம், கையிருப்புப் பணம் போன்றவற்றையெல்லாம் விசாரித்து விட்டு அந்த இளைஞரிடம்,
“நீர் விவகாரத்துப் பெறும் வரை மாதந்தம் 3,400 டொலர்கள் மனைவிக்கும் குழந்தைகளிற்கும் வீட்டு வாடகைக்கு, உணவு உடைக்கு எனக் கொடுக்க வேண்டும். விவகாரத்துப் பெற ஒன்றரை வருடங்கள் எடுக்கலாம்.”
“விவகாரத்துப் பெற்ற பிறகு பிள்ளை பராமரிப்பு பணமாக மாதாந்தம் 1,800 டொலர்கள் கொடுக்க வேண்டும். உமது முன்னைய மனைவி விவாகரத்துப் பெற்ற பிறகும் வேலைக்குச் செல்லாவிட்டால் இந்தத் தொகை அதிகரிக்கும்.”
“உமது மூன்று குழந்தைகளும் 18 வயது வரும் வரை நீர் இந்தப் பராமரிப்பு பணத்தைக் கொடுக்க வேண்டும.; நீர் இப்போது 2000 டொலர்கூட மாத வருமாணமாகப் பெறவில்லையே? விவாகரத்து வேண்டுமா என்பதை ஆழமாக யோசித்துக் கூறும்” எனக் கூறியுள்ளார்.
இளைஞரும் வீட்டின் மேல் கடன்பெற்றுத் தன்னால் தற்காலிகமாக நிலைமையைச் சமாளிக்க முடியும் எனக் கூறியபோது வீட்டின் அரைப்பகுதிப் பெறுமாணம் உமது மனைவிக்குரியது. அவரது அனுமதியில்லாமல் நீர் இரண்டாம் அடமாணமோ, கடனோ பெறமுடியாது என்று கூறியுள்ளார்.
ஒரு யோசனையுமில்லாமல் மனைவியின் வீட்டிற்குச் சென்று தான் செய்த தவறை மன்னிக்குமாறு அந்த இளைஞர் நேரடியாக மனைவியிடம் மன்றாடி மன்னிப்புக் கேட்டு மனைவியை அழைத்து வந்து அமைதியாகக் குடும்பம் நடாத்துகின்றார்.
அந்த இளைஞர் இப்போது குடும்பம் மாத்திரம் நடாத்தவில்லை, தனது நண்பர்களிற்கு இதனைத் தனது அறிவுரையாகவும் கூறி வருகின்றார்.