நாட்டில் மேலும் 3 கொரோனா மரணங்கள் பதிவானது. இதையடுத்து, மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 194 ஆக உயர்ந்தது.
தர்கா நகரை சேர்ந்த 90 வயதான ஒருவர் கொரோனா தொற்று உறுதியான பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமடைந்தார்.
கொரோனாவால் அதிகரித்த உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்படும் மாரடைப்பு, இரத்த விஷம் அவரது மரணத்திற்கான காரணம் என தீர்மானிக்கப்பட்டது.
83 வயதான ஒருவர் கண்டி தேசிய மருத்துவமனையில் இருந்து தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் நேற்று மரணித்தார்.
அவர் கொரோனா நிமோனியா மற்றும் ஒரு நீண்டகால சிறுநீரக நோயால் மரணமானார்.
களுத்துறை தெற்கைச் சேர்ந்த 57 வயது பெண் கொரோனா நோய்த்தொற்று மற்றும் இரத்த விஷத்தின் விளைவாக டிசம்பர் 22 ஆம் திகதி களுத்துறை மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் மரணித்தார்.