பிரித்தானியாவில் மார்பின் அளவு பெருத்ததால் ஏற்பட்ட அவஸ்தைகளில் இருந்த மீள்வதற்காக மாணவியொருவர் நிதி திரட்டி வருகிறார். மார்பின் அளவை குறைக்க சத்திர சிகிச்சை செய்ய அவர் எதிர்பார்க்கிறார்.
பர்மிங்காமை சேர்ந்த சட்ட மாணவியான அமினாட்டோ தபோ, தன்னுடைய பெரிய மார்பகங்களிற்காக கல்லூரியில் கேலி செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆர்வலர்களிடமிருந்து நிதி திரட்ட உருவாக்கப்பட்ட கோ ஃபண்ட் மீ பக்கத்தில், கடந்த நவம்பர் நடுப்பகுதியில் இணைந்த அமினாட்டோ, இதுவரை 1,309 பவுண்ஸ் நிதி திரட்டியுள்ளார்.
“துரதிர்ஷ்டவசமாக நான் பெரிய மார்பகங்களுடன் ஆசீர்வதிக்கப்பட்டேன். மற்றவர்களிடமிருந்து நான் வித்தியாசப்படுகிறேன். அது உண்மையில் எனக்கு நிறைய மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. என் டீன் ஏஜ் ஆண்டுகளில் உடல் வலியுடன், இப்போது நான் வயது வந்தவளாக மாறுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கோ ஃபண்ட் மீ பக்கம் தனக்கிருக்கும் கடைசி வழியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சிறு வயதிலிருந்தே அவளது மார்பகங்கள் வேகமாக வளர்ந்ததாகவும், 15 வயதில் 32JJ கப் அளவாகியதாகவும் தபோ விளக்குகிறார்.
தனது உடலை பாதுகாப்பற்றதாக உணருவதை அவள் விவரிக்கிறார். சாதாரண டி-ஷர்ட்டைப் போன்ற எந்தவொரு ஆடைகளும் தனது மார்பு பகுதியை வெளிப்படுத்துவதால், தெரிந்தெடுத்த ஆடைகளை மட்டுமே உடுத்த முடியுமென்றார்.
“நான் வயதுக்கு வந்ததும், என் மார்பளவு அதிகரித்ததும் நான் அடிக்கடி பலரால் பாலியல் ரீதியாகவும் பார்க்கப்படுவதாக உணர்ந்தேன்“ என்றார்.
அவளது மார்பகங்களின் அளவிற்கான உள்ளாடையை கண்டுபிடிப்பதில் சிரமப்பட்டு வருகிறார். சிறு வயதலேயே விளையாட்டில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டியிருந்தது. தொடர்ந்து முதுகுவலியை அனுபவிப்பதாகவும், எல்லா நேரத்திலும் மார்புக் கச்சை அணிய வேண்டிய அசௌகரியத்தை அனுபவிப்பதாகவும், வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்ள வேண்டியிருப்பதாகவும், மார்புக்கச்சை ஸ்ட்ராப்களினால் உடலில் ஏற்பட்டுள்ள தழும்புகளை பற்றியும் விபரித்தார்.
5’4 உயரமுடைய அவருக்கு மார்பகங்களின் அதிகரித்த எடை பெரிய சுமையாக மாறியுள்ளது.
பிரித்தானிய சுகாதாரத்துறை தனக்கு உதவவில்லை, பிசியோதெரபியை மட்டுமே பரிந்துரைத்துள்ளனர் என்றார்.
அறுவை சிகிச்சை செய்யப்படுவதைப் பற்றி அவர் முன்பு பயந்துவிட்டதாகவும், ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கான ஒரே தேர்வு இதுதான் என்பதால் மனதை திடப்படுத்தியதாக தபோ கூறுகிறார்.
அவரது நிதி திரட்டும் பக்கத்தில் இதுவரை 50 க்கும் மேற்பட்டோர் நன்கொடை அளித்துள்ளனர்.