பிரான்ஸ் மாயனத்தில் உள்ள கல்லறைகள் மீது மர்மமான மறையில் சுவசுத்திக்கா சின்னம் வரைப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Fontainebleau நகரில் உள்ள மாயனத்திலே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆனால் யூத கல்லறைகள் ஏதும் சேதப்படுத்தப்படவில்லை என்பது அசாதாரண திருப்பமாக உள்ளது.
சம்பவம் குறித்து Fontainebleau நகர மேயர் Frederic Valletoux கூறியதாவது, சுமார் 67 கல்லறைகள் மீது பிங்க், வெள்ளை மற்றும் சில்வர் நிறங்களில் சுவசுத்திக்கா சின்னம் வரைந்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.
சில கல்லறைகள் மீது Biobananas மற்றும் Charles என எழுதப்பட்டிருந்தது, ஆனால் யூத எதிர்ப்பு குறியீடுகள் எதுவும் இல்லை.
இதற்கிடையில், பிரதான கல்லறைக்கு அடுத்ததாக அமைந்துள்ள நகரத்தின் யூத கல்லறை சேதமில்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கல்லறைகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இது ஒரு இழிவான செயல். இது காழ்ப்புணர்ச்சி கூட இல்லை , இது ஒரு குற்றம் என நகர மேயர் Valletoux கூறினார். கல்லறைகளை யார் சேதப்படுத்தினர் என்பது தற்போது வரை மர்மமாக உள்ளது.