அடுத்த ஆண்டு 2 இலட்சதிற்கு மேற்பட்ட சுயதொழில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக பொருளாதார மறுமலர்ச்சிக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) சமுர்த்தி முகாமையாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சந்திப்பின் போது சமுர்த்தி, பொருளாதார, நுண் நிதி, சுயதொழில் மற்றும் வர்த்தக அபிவிருத்தி தொடர்பிலும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்தோடு 2021 வரவு செலவு திட்டங்களை கிராமப்புற அளவில் செயற்படுத்துவதில் சமுர்த்தி திணைக்களத்திற்கு விசேடபொறுப்பு உள்ளது என்றும் பசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு சமுர்த்தி பெறுநர்களின் ஜீவனோபாய மார்க்கத்தை கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் கொண்டு வரும் வேலைத்திட்டத்தில் இணைந்து பணியாற்றுமாறும் சமுர்த்தி முகாமையாளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.