பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டிக்கவும், தடுக்கவும் அரசாங்கம் தவறி விட்டது என மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இளைஞர்கள், மகளிர் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் நாகை, நாகூரில் நடைபெற்ற பிரசார நிகழ்ச்சிகளில் பேசும்போதே அவர் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்தார்.
எவ்வளவு மரியாதையாகப் பேசினாலும், சில அரசியல்வாதிகள் மரியாதை இல்லாமல் பேசுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் மக்கள் நீதி மய்யம் அரசு அமைக்கும்போது பழிவாங்கும் அரசியலையும், பழிபோடும் அரசியலையும் கையில் எடுக்காமல், வழிகாட்டும் அரசியலைத்தான் முன்னெடுக்கும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கான மரியாதையை அரசு போற்றவில்லை என குறிப்பிட்டுள்ள கமல்ஹாசன் அவர்களை மதிக்கும் அரசாக இருந்தால், கடுமையான கண்டனங்களை விடுதிருக்க வேண்டும்என்றும் ஆனால் இந்த அரசு அதை அரசு செய்யத் தவறி விட்டது என கூறினார்.
பொள்ளாச்சியில் இளம்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த குற்றவாளிகளுக்கு இதுவரை தண்டனைக் கிடைக்கவில்லை என்றும் அரசின் ஆர்வமின்மையே இதற்குக் காரணம் என்றும் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.