Loading...
இலங்கை – இந்திய மீனவர் விவகாரம் தொடர்பில் இன்று (30) இரு நாட்டு அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு நடக்கவுள்ளது.
இந்திய மீனவர்களின் அத்துமீறல் அதிகரித்துள்ள நிலையில், இன்று இரண்டு நாட்டு அதிகாரிகள் மட்டத்தில் காணொலி வழியாக பேச்சு நடக்கவுள்ளது.
கடற்தொழில் அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழு இலங்கை சார்பில் பேச்சில் கலந்து கொள்ளும்.
Loading...
காலை 11 மணிக்கு பேச்சு ஆரம்பிக்கிறது.
முன்னதாக, இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரிற்கும், கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்குமிடையில் தொலைபேசி வழியாக நடந்த கலந்துரையாடலை தொடர்ந்து இன்றைய சந்திப்பு இறுதி செய்யப்பட்டுள்ளது.
Loading...