புதுக்குடியிருப்பு நகர வர்த்தகர்கள், மற்றும் கொரோனா தொற்றாளருடன் தொடர்பிலிருந்தவர்களிற்கான பிசிஆர் பரிசோதனை இன்று (30) நடைபெறுகிறது.
புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இந்த பரிசோதனைகள் நடந்து வருகிறது.
தம்புள்ள வர்த்தகர் ஒருவர் புதுக்குடியிருப்பில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தார். அவருக்கு வீரியம் மிக்க வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தது. இதையடுத்து புதுக்குடியிருப்பு பகுதியில் சுமார் 194 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இதைதவிர, புதுக்குடியிருப்பு சந்தை வர்த்தகர்கள், நகரிலுள்ள வர்த்தக நிலையத்தினர் அனைவரும் இன்று பிசிஆர் சோதனைக்குள்ளாக்கப்படுவார்கள். இன்றைய பிசிஆர் சோதனையில் பங்கேற்காதவர்கள் பணிபுரியும் வர்த்தக நிலையங்கள் மூடப்படும் என சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர்.