Loading...
சருமத்தில் ஆக்காங்கே கருப்பாகவோ வெளுத்தோ, ஒட்டு போட்டது போல் திட்டு திட்டாக இருந்தால் அதனை மங்கு என்று கூறுவார்கள்.
இது அதிகமாக பெண்களுக்கு தான் வரும். இது பெரும்பாலும் நெற்றி, இரண்டு கன்னங்கள், இரு புருவங்களுக்கு இடைப்பட்ட பகுதி, மூக்கு மற்றும் தாடையில் அதிகமாக வரும்.
பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய், ஹார்மோன் பிரச்சினை, மெனோபாஸ் தோன்றும் காலங்களில் மற்றும் சூரியன் ஒளியில் இருந்து நமக்கு விட்டமின் டி சத்து கிடைக்கிறது.
Loading...
அதே நேரத்தில் அதிகமான சூரிய ஒளி கதிரால் முகம் பாதிக்கப்பட்டு மங்கு வருகிறது.
இதனை எளிய முறையில் போக்க ஒரு சில பொருட்கள் உதவுகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
- தேனும் பாதாமும் சேர்த்த கலவை மங்குகளை போக்க சிறந்த வழியாகும். பாதாமை ஊற வைத்து தோலினை நீக்கிக் கொள்ளுங்கள். அதனை நன்றாக அரைத்து, அதனுடன் தேன் கலந்து முகத்தில் போடவும். தினமும் இப்படி செய்தால், மங்கு குறைந்து, சருமம் கிளியாராகிவிடும்.
- உருளைக் கிழங்கிலிருந்து சாறு எடுத்து அதனை முகத்தில் தேய்த்து வாருங்கள். முகம் என்றில்லாமல், உடல் முழுவதும் இந்த சாறினை பூசி, காய்ந்த பின் குளிந்தால், சரும பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வு கிடைக்கும்.
- மஞ்சளை பாலுடன் கலந்து மங்கு இருக்கும் இடத்தில் தினமும் பூசி வாருங்கள். சிறிது நாட்களில் மங்கு மற்றும் சருமப் பிரச்சனைகள் காணாமல் போகும். கடைகளில் வாங்கும் மஞ்சள் பொடி பயன் தராது. மஞ்சள் கிழங்கை வாங்கி பொடித்துக் கொள்ளுங்கள். அதுதான் சிறந்தது.
- ஓட்ஸை யோகார்ட்டுடன் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இதனுடன் சிறிது தக்காளி சாறு கலந்து, பேஸ்ட் போல் செய்து கொள்ளுங்கள். இதனை சருமத்தில் ஏற்பட்டுள்ள மங்கு, கரும் புள்ளிகள் மீது நன்றாக தேயுங்கள். காய்ந்த பின் கழுவவும். தினமும் இவ்வாறு செய்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
- வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஆப்பிள் சைடர் வினிகரை கலந்து முகத்தில் போடவும். காய்ந்தவுடன் கலவுங்கள். இது சருமத்தில் உள்ள செல்களில் இருக்கும் மெலனின் சுரப்பினை சீர் செய்யும். இதனால் சருமத்தில் உண்டாகும் மங்கு, வெண்மையான திட்டுகள் மறைந்து சருமம் ஒரே மாதிரி காட்சி அளிக்கும்.
- ஸ்ட்ரா பெர்ரி பழங்களை சதைப் பகுதியை எடுத்து, நன்றாக மசித்துக் கொள்ளுங்கள். இதனுடன் சிறிது பால் கலந்து முகத்தில் போட்டு காய விடவும். பின் குளிர்ந்த் நீரில் கழுவுங்கள். நாளடைவில் நல்ல மாற்றங்களை உண்டு பண்ணும்.
Loading...