வயர்லெஸ் முறையிலான ஹெட்போன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துவருகின்றமை தெரிந்ததே.
இவை சார்ஜ் செய்து பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் AirPods Pro 2 எனும் புதிய பதிப்பினை அறிமுகம் செய்ய ஆப்பிள் நிறுவனம் தயாராகி வருகின்றது.
இந்நிலையில் இச் சாதனத்தின் அறிமுகம் தொடர்பாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது AirPods Pro 2 ஆனது இரண்டு வெவ்வேறு அளவுகளில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழமையாக ஒரு அளவில் மாத்திரமே அறிமுகம் செய்து வந்த ஆப்பிள் நிறுவனம் இவ் வருட ஆரம்பத்தில் AirPods Pro சாதனத்தினையும் ஒரு அளவில் மாத்திரமே அறிமுகம் செய்திருந்தது.
அத்துடன் இவ் இரு அளவுகளைக் கொண்ட சாதனங்களுக்கு இடையேயான விலையிலும் வித்தியாசம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.