திருகோணமலையில் இன்றைய தினம் 10 கொரோனா தோற்றார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 நபர்களும், கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 நபர்களும், மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 1 நபருமாக 10 தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
திருகோணமலை மத்திய வீதியில் அமைந்துள்ள பிரபல சப்பாத்து கடையில் பணிபுரியும் ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் பரிசோதனையில் மேலும் 3 நபர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மேலும் மூதூரிலிருந்து திருகோணமலை வைத்தியசாலைக்கு சத்திர சிகிச்சை ஒன்றிற்காக வந்திருந்த ஒருவருக்கு செய்யப்பட்ட அண்டிஜன் பரிசோதனையில் அவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
குறித்த நபர் வைத்தியசாலைக்கு பேரூந்தில் வந்ததாகவும் அவர் அப்போது முகக் கவசம் அணிந்திருக்கவில்லை என்பதால் அப் பேரூந்தில் பயணித்தவர்கள் தொடர்பிலும் விசாரணை முன்னெடுக்கப்படுவதாகவும் திருகோணமலை மாவட்ட பிரதி பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வி.பிரேமானந்த் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.