தொடர்ந்து கற்றாழை சாற்றை சருமத்தில் தடவி வர,உங்கள் தோல் வெள்ளையாக மாறும்.
பெண்களின் முக்கியமான கவலைகளில் ஒன்று தாங்கள் வெள்ளையாக இல்லையே என்பதுதான். அதனால் தான் சருமத்தை பளபளப்பாக்குவதாக கூறும் செயற்கைக் கிரீம்கள்,பல கோடி ரூபாய்க்கு இந்தியாவில் விற்பனையாகி வருகின்றன.
ஆனால் எந்த வித செலவும் இல்லாமல்,பக்க விளைவுகளும் இல்லாமல் இயற்கை முறையில் உங்கள் சருமத்தை வெள்ளையாக்கலாம். எப்படி என்கிறீர்களா?
கற்றாழையில் உள்ள ஜெல் போன்ற சதைப்பகுதியை சிறிதளவு எடுத்துக் கொள்ளுங்கள்.அதற்கு வாய்ப்பில்லை எனில் கடைகளிலேயே கற்றாழை ஜெல் கிடைக்கும்.
அதனுடன் தூளாக அரைத்த சர்க்கரையை இரண்டு டீஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள்.நல்ல தரமான மலைத் தேன் ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் எண்ணெய் பிசுக்கு இல்லாத ஒரு சட்டியை மிதமாக சூடாக்கிக் கொள்ளவும்.அதில் ஏற்கனவே வைத்திருக்கும் கற்றாழை ஜெல்லை போடவும்.
அதனை கிளறிக் கொண்டே,இரண்டு நிமிடங்களுக்கு பிறகு சர்க்கரைத் தூளை மேலாக தூவவும்.இந்தக் கலவை கெட்டியாகாத வண்ணம்,மேலும் ஒரு இரண்டு நிமிடங்களுக்கு கிளறவும்.அடுப்பிலிருந்து இறக்குவதற்கு முன்னர் சுத்தமான மலைத்தேனை அந்த கலவையில் ஊற்றவும்.
பின்னர் அந்த கலவையை அடுப்பிலிருந்து இறக்கி நன்றாக ஆற வைக்கவும்.இந்த கற்றாழைக் கலவையை தூங்குவதற்கு முன்போ அல்லது வெளியில் கிளம்புவதற்கு சிறிது நேரத்திற்கு முன்போ முகம் மற்றும் தோல் பகுதிகளில் மாஸ்க் தடவ வேண்டும்.
பின்னர் இருபது நிமிடங்கள் கழித்து சுத்தமான பருத்தித் துணியிலோ அல்லது பஞ்சிலோ முகத்தை நன்றாக துடைத்தெடுக்க வேண்டும்.பின்னர் நீரால் முகத்தை கழுவ வேண்டும்.இதனை தொடர்ந்து செய்து வந்தால்,முகம் பொலிவடைவதுடன்,சருமம் வெள்ளையாக தோன்றத் துவங்கும்.