கொரோனாவை குணப்படுத்துவதற்கு சிவப்பு எறும்பு சட்னி உதவுமா என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி ஆயுஷ் அமைச்சகத்திற்கு ஒடிசா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு தீர்வு காண மருந்துகள் கண்டு பிடிப்பதில் பல்வேறு நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன.
ஒரு சில நாடுகளில் இந்த கொரோனா தடுப்பூ மருந்துக்கான சோதனை இறுதிக்கட்டத்தில் உள்ளன.
இந்நிலையில், ஒடிசா மற்றும் சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பழங்குடியின மக்கள் சிவப்பு எறும்புகளை பிடித்து அதனுடன் பச்சை மிளகாய் மற்றும் பாரம்பரிய பொருட்களை பயன்படுத்தி சட்னி ஒன்றை தயார் செய்கின்றனர்.
இந்த சட்னியை உண்ணுவதன் மூலம் காய்ச்சல், இருமல், பொதுவானசளி, மூச்சுவிடுவதில் சிரமம் மற்றும் சோர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் இது குறித்து ஒடிசா நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இது குறித்து விளக்கம் அளிக்கும் படியும், மூன்று மாதங்களில் பதில் அளிக்கும் படி உத்தரவிட்டுள்ளது.