இன்று அதிகமானவர்கள் பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவையாக ஜிமெயில் காணப்படுகின்றது.
இச் சேவையில் மின்னஞசல்களை அழிக்கக்கூடிய வசதியும் தரப்பட்டுள்ளமை தெரிந்ததே.
இவ்வாறு அழிக்கப்படும் மின்னஞ்சல்கள் Trash பகுதிக்குள் சென்றால் அவற்றினை மீட்டுக்கொள்ள முடியும்.
அவ்வாறின்றி நிரந்தரமாகவும் மின்னஞ்சல்கள் அழிக்கப்படும் சந்தர்ப்பங்கள் உண்டு.
இப்படி அழிக்கப்பட்ட மின்னஞ்சல்கள் மீண்டும் தேவைப்படின் மீட்டெடுப்பதற்கான வழி இருப்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஜிமெயில் சேவையிலேயே இவ் வசதி காணப்படுகின்றது.
இச் சேவையினைப் பெறுவதற்கு https://support.google.com/mail/workflow/9317561?visit_id=637412871676228046-482473334&rd=1எனும் முகரிக்கு செல்ல வேண்டும்.
பின்னர் மின்னஞ்சல்கள் மீட்கப்பட வேண்டிய கணக்கினுள் லொக்கின் செய்து Continue என்பதை கிளிக் செய்யவும்.
இப்போது அழிக்கப்பட்ட மின்னஞ்சல்கள் மீட்கப்பட்டிருக்கும்.
எவ்வாறெனினும் 30 நாட்களுக்குள் அழிக்கப்பட்ட மின்னஞ்சல்களையே இவ்வாறு மீட்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.