கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு தலைக்காதல் காரணமாக கல்லூரி பேராசிரியையை, நபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரியை சேர்ந்த லின்சி(26) என்பவர் அப்பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் பேராசிரியாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இன்று புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தேவாலத்திற்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்த லின்சியை, நபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார்.
இரத்தம் சொட்ட சொட்ட தரையில் வீழ்ந்த லின்சியை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதற்கிடையில் தப்பி ஓட முயன்ற அந்நபரையும் பொலிசில் பிடித்து ஒப்படைத்துள்ளனர்.
லின்சியை கத்தியால் குத்திய வாலிபரிடம் பொலிசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் சின்னத்துறையை சேர்ந்த பிஜூ(27), மீன்பிடி தொழிலாளி என்பது தெரியவந்தது.
மேலும் அவர் லின்சியை ஒருதலையாக காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ஒரு தலை காதலால் பேராசிரியை கத்தியால் சரமாரியாக குத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.