Loading...
மது போதை மற்றும் அதிக வேகத்துடன் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட சுற்றிவளைப்பு எதிர்வரும் 5ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்தார்.
Loading...
அதேநேரம், கடந்த 12 நாட்களில் வாகன விபத்துக்களில் மாத்திரம் 65 பேர் உயிரிழந்தனர் என அவர் குறிப்பிட்டார்.
இதனை தடுப்பதற்காக மதுபோதையில் மற்றும் அதிக வேகத்துடன் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை சுற்றிவளைத்து கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அஜித் ரோஹண தெரிவித்தார்.
Loading...