பிரித்தானியாவில் பேரழிவை தடுக்க உடனடியாக இதை செய்தாக வேண்டும்! முக்கிய நகரின் தலைவர்கள் வலியுறுத்தல்
கொரோனாவின் புதிய வகையை கட்டுப்படுத்தவும், பேரழிவை தடுக்கவும் மற்றொரு தேசிய ஊரடங்கு அமுல்படுத்த வேண்டும் என லிவர்பூலின் கவுன்சில் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
கடுமையான புதிய வகை வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வதற்கான வேகம் அதிகரித்து ஆபத்தான அளவை எட்டியுள்ளது.
இப்போது உயிர்களை மற்றும் NHS-ஐ காப்பாற்ற அவசர நடவடிக்கை தேவை என்று லிவர்பூல் நகரின் செயல் மேயர், கவுன்சிலர் Wendy Simon மற்றும் தொழிற்கட்சியால் நடத்தப்படும் நகர சபையின் அமைச்சர்கள் ஆகியோர், வலியுறுத்தியுள்ளனர்.
கொரோனாவின் புதுவை வேகமாக பரவுகிறது மற்றும் லண்டன் மற்றும் தென்கிழக்கில் மிகவும் பரவலாக உள்ளது, அங்கு மருத்துவமனைகளில் நெருக்கடி அதிகரித்துள்ளன.
தெற்கில் இருந்து வடக்கு நோக்கி புதுவகை கொரோனா பரவுவதாக நம்பப்படுகிறது, இதனால் NHS மீதான அழுத்தம் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
லிவர்பூலில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு வாரங்களில் கிட்டத்தட்ட 1,00,000 பேருக்கு 350 என்ற விகிதத்தில் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.