திருகோணமலை மாவட்டத்தில் நேற்று (3) 18 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந்த் தெரிவித்தார்.
திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட ஜமாலியா, லவ் லேன், சிறிமாபுர பகுதிகளில் கடந்த 30ஆம் திகதி 42 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவின்படி, 6 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
31 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளின்படி கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பெண்ணொருவரும், திருகோணமலை நகரில் ஏழு பேரும் தொற்றுடன் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இதில் மூன்று பெண்கள், ஒரு இளைஞரும் உள்ளடங்குகின்றனர்.
திருகோணமலை சிறிமாபுர பகுதியில் 93 பேருக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட 93 துரித அன்டிஜன் பரிசோதனை மூலம் 4 தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நான்கு மணிவரையான காலப்பகுதியில் திருகோணமலை மாவட்டத்தில் 18 புதிய தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.