மூலமுதற்கடவுள் வழிபாட்டால் முன்னேற்றம் கூடும் நாள். முக்கியப் புள்ளிகள் இல்லம் தேடி வருவர். வெளிநாட்டுப் பயண வாய்ப்புகள் கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும்.
வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும் நாள். ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் ரீதியாக எடுக்கும் முக்கிய முடிவுகள் அனைவரையும் ஆச்சர்யப்பட வைக்கும்.
கனிவாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்ள வேண்டிய நாள். முன்னோர் சொத்துக்களில் முறையான லாபம் கிடைக்கும். பிரியமானவர்களைச் சந்திப்பதன் மூலம் மனக்கவலைகள் தீரும்.
ஆனந்தம் காண ஆனைமுகனை வழிபட வேண்டிய நாள். பிள்ளைகளிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சிரித்துப் பேசும் நண்பர்களால் சிக்கல்கள் ஏற்படலாம்.
வசதிகள் பெருக வழிவகை செய்து கொள்ளும் நாள். சொந்த பந்தங்களின் ஒத்துழைப்பால் உள் ளம் மகிழ்வீர்கள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். கடன் சுமை குறையும்.
எதிர்காலம் இனிமையாக திட்டங் கள் தீட்டும் நாள். நீடித்த நோயி லிருந்து நிவாரணம் காண்பீர்கள். தொழில் போட்டிகள் விலகும். நெடு நாளைய வழக்குகள் பஞ்சாயத்துக்கள் வாயிலாக தீர்வு பெறும்.
இனிமையான நாள். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமையடைவீர்கள். புது முயற்சிகளில் வெற்றி ஏற்படும். அரசு வழி சலுகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். பூர்வீக சொத்து விற்பனையால் தனலாபம் உண்டு.
வெற்றிகள் குவிய விநாயகப் பெருமானை வழிபட வேண்டிய நாள். தேசப்பற்று மிக்கவர்களின் ஒத்துழைப்பால் தொழில் வளர்ச்சி கூடும். இடம், பூமியால் லாபம் கிட்டும். செல்வாக்கு உயரும்.
வம்பு வழக்குகளைச் சமாளித்து வளம் காணும் நாள். நண்பர்கள் சொல்லும் யோசனை உங்களுக்கு நல்லதாகத் தெரியும். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பால் உற்சாகம் அடைவீர்கள். அரசு வழியில் அனுகூலம் உண்டு.
புதிய முயற்சிகளில் அதிக ஆர்வம் காட்டும் நாள். நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைப்பீர்கள். சம்பள உயர்வு பற்றிய செய்தி கேட்டு மகிழும் வாய்ப்பு உண்டு. வியாபாரம் திருப்தி தரும்.
தைரியத்தோடு செயல்பட்டு சாதனைகள் படைக்கும் நாள். திட்டமிட்ட பயணமொன்றில் மாற்றம் ஏற்படலாம். உடல் நலனில் கவனம் தேவை. கொடுக்கல்– வாங்கல்கள் சீராகும்.
விரயங்கள் குறைய விரைந்து முடிவெடுக்கும் நாள். பயணத்தால் பலன் உண்டு. நண்பர்களின் பாராட்டு மழையில் நனைவீர்கள். உத்யோகத்தில் வேலைப்பளு அதிகரித்தாலும் மதிப்பு கூடும்.