Loading...
பொதுவாக சிலருக்கு இளம் வயதிலேயே அவர்களின் நெற்றியில் வயதானவர்களுக்கு இருப்பதை போன்று வரிகள் மற்றும் சுருக்கங்கள் ஏற்படுகிறது.
மென்மையான சருமம் கொண்டவர்கள் தங்களின் நெற்றியை அடிக்கடி சுருக்குவதால் கூட மடிப்புகள் ஏற்பட்டு அந்த இடத்தில் கோடுகள் போன்று நிலைத்து விடுகிறது.
எனவே நமது நெற்றியில் இது மாதிரியான சுருக்கங்களை போக்குவதற்கு சூப்பரான டிப்ஸ் இதோ!
Loading...
தேவையான பொருட்கள்
- வாழைப்பழம் – 1
- தேன் – 1 டேபிள் ஸ்பூன்
- தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
வாழப்பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் தேன் மற்றும் தயிரை கலந்து பேஸ்ட் போல செய்துக் கொள்ள வேண்டும்.
பின் இதனை முகத்தில் தடவி மசாஜ் செய்து, 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
இதே போல் வாரம் 3 முறைகள் தவறாமல் செய்து வந்தால், நெற்றில் இருக்கும் கோடுகளை போன்ற சுருக்கங்கள் மறைந்து மிகவும் அழகாக தோற்றமளிக்கும்.
Loading...