Loading...
உருமாறிய கொரோனா வைரஸ் ஒரு பக்கம் மக்களை ஆட்டிபடைத்துகொண்டிருக்கும் நேரத்தில், தற்போது கேரளாவில் பறவைக்காய்ச்சல் வேகமாக பரவிகொண்டிருக்கிறது.
மேலும், இந்தியாவின் வட மாநிலங்களான ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் பறவை காய்ச்சல் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது.
Loading...
இதனால், பறவைக்காய்ச்சலை கண்காணிக்க டெல்லியில் மத்திய அரசு கண்காணிப்பு மையத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து பறவைக்காய்ச்சலால் பாதிக்கப்படும் பறவைகள் விவரங்கள் மற்றும் மாதிரிகளை மாநில சுகாதாரத்துறை சேகரித்து உடனுக்குடன் அனுப்பி வைக்கவும், அனைத்து விவரங்கள் அடங்கிய அறிக்கையை சமர்பிக்குமாறும் உத்தரவு வெளியாகியுள்ளது. இதனால் தேசிய அளவில் பறவைக்காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Loading...