Loading...
பொலிஸ் அவசர இலக்கமான 119 ஐ அழைத்து தவறான தகவல் வழங்கிய ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 5ஆம் திகதி தன்னுடைய தொலைபேசியிலிருந்த பொலிஸ் அவசர அழைப்பை ஏற்படுத்தி, கண்டியில் ஒரு சம்பவம் நடப்பதாக போலியான தகவல் வழங்கியுள்ளார்.
தெஹிவளை, கல்தெர கார்டனில் வசிக்கும் 40 வயதானவரே கைதாகினார்.
Loading...
அவர் ஈரான், அமெரிக்காவில் தொழில் மற்றும் கற்கையில் ஈடுபட்டுள்ளார். அவரது சகோதரர்கள் மத்திய கிழக்கில் தற்போது தொழில் புரிந்து வருகிறார்கள்.
கைது செய்யப்பட்டபோது, அவர் மருத்துவ சிகிச்சை பெறுபவர் என்பதற்கான சில ஆவணங்களை தாயார் சமர்ப்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
Loading...