2017ம் ஆண்டு ஆரம்பத்தில் சனி பெயர்ச்சியும் ஆகஸ்ட் மாதம் ராகு கேது பெயர்ச்சியும், செப்டம்பரில் குரு பெயர்ச்சியும் நிகழ உள்ளது.
அவரவருக்கென்று தனியாக இருக்கும் ஜாதக லக்கினம் தசாபுத்தி பலன்கள், குணாதிசயம், ராசி பலன்கள் மாறுபடலாம். ஜாதகத்தில் சுபபலன்கள் தரக்கூடிய தசை புக்தி அந்தரங்கள் நடக்குமானால் இங்கே கோசார ரீதியாக சொல்லப்பட்டுள்ள நற்பலன்கள் கூடும் கெடுபலன்கள் குறையும்.
ஜாதக பலமும் சிறப்பாக இல்லாமல் கோசாரமும் அனுகூலமாக அமையாமல் போனால் கெடுபலன்கள் அதிகமாகும். இப்படிப்பட்ட கிரக நிலை அமையப் பெற்றவர்கள் கிரகப் பிரீதி கோயில் வழிபாடு தான தர்ம காரியங்கள் ஆகியவற்றின் மூலம் அதிக சங்கடங்கள் ஏற்படாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.
கடக ராசிக்காரர்களே!
இந்த ஆண்டு துவக்கத்தில் மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கும் குரு பகவானால் இடமாற்றம் உண்டாகும் மனம் நிம்மதியாக இருக்கும் ஆண்டின் இறுதியில் குருவின் ராசி மாற்றமானது புதிதாக வீடு வாகனம் வாங்கும் வகையில் மிகவும் சிறப்பைக் கொடுக்கும். ஆண்டின் ஆரம்பத்திலேயே சனிபகவான் அசுபஸ்தானத்திற்கு வருவது தொழிலில் தடை உண்டாக்கும் இவ்வாண்டு இறுதியில் நடைபெறும் ராகு கேது பெயர்ச்சி சுப அசுப பலன்களை கலந்து கொடுக்கும்.
ஜனவரி – எச்சரிக்கை தேவை
ஆண்டின் துவக்கத்தில் ஆறாமிடத்தில் இருக்கும் சூரியன் கடன் வாங்கும் சூழ்நிலையை தருவார். இம்மாதம் 14ம் தேதி ஏழாமிடத்திற்கு சூரியன் வருகிறார் பண சிக்கல்கள் தீரும் செவ்வாய் இம்மாதம் 20ம் தேதி ஒன்பதாம் இடத்திற்கு வருகிறார் பரம்பரையாக குடும்பத்தார் அனுபவித்து வந்த சொத்தில் பங்கு கிடைக்கும் புதன் இம்மாதம் முழுவதும் ஆறாம் இடத்தில் இருப்பது தாய் மாமனிடம் சச்சரவைக் கொடுக்கும். குரு மூன்றாம் இடத்திலிருப்பது அடிக்கடி பயணம் செய்யும் நிலையை கொடுக்கும் சுக்கிரன் எட்டாமிடத்திலிருப்பது உடன் பிறந்த சகோதரிகளால் மனக் கஷ்டத்தை கொடுக்கும் இம்மாதம் 27ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு மனைவியால் அதிர்ஷ்டம் உண்டாகும் சனி வருட ஆரம்பத்தில் ஐந்தாமிடத்தில் இருந்தாலும் இம்மாதம் 26ம் தேதி தேதி ஆறாமிடத்திற்கு வருவது தொழிலில் தடையை கொடுக்கும் ராகு இரண்டாமிடத்தில் இருப்பது அடிக்கடி வருமானத்தை அதிகப் படுத்தும் கேது எட்டாமிடத்திலிருப்பது எல்லா விஷயங்களிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பிப்ரவரி – வியாபாரத்தில் மேன்மை
சூரியன் இம்மாதம் 13ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் உத்தியோகத்தில் மன லயிப்பு இல்லாமல் ஏனோதானோ என்று வேலை பார்க்கும் மன நிலையை உண்டாக்கும் புதன் இம்மாதம்03ம் தேதி ஏழாமிடத்திற்கு வருவது வியாபாரத்தில் மேன்மையை உண்டாக்கும் 22ம் தேதி எட்டாமிடத்திற்கு வருவது ஷேர்மார்க்கெட் முதலீடுகளை தவிர்ப்பது சிறப்பு. செவ்வாய், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி கிடையாது கடந்த மாத பலன்களையே இம்மாதமும் தொடர்ந்து கொடுப்பார்கள்.
மார்ச் – பணியிடமாற்றம்
சூரியன் இந்த மாதம் 14ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் அரசு ஊழியர்களுக்கு தாங்கள் விரும்பிய இடத்திற்கு பணியிடமாற்றம் கிடைக்கும். செவ்வாய் 02ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் பதவி உயர்வு கிடைக்கும் புதன் 11ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருவது வெளிநாடு செல்லும் யோகத்தை தரும் 27ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் ஒப்பந்தத் தொழில் சிறப்படையும். குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.
ஏப்ரல் – லாபம் அதிகரிக்கும்
சூரியன் இந்த மாதம் 14ம் தேதி பத்தாம் இடத்திற்கு வருகிறார் வேலை தேடி எதிபார்த்திருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும் செவ்வாய் இந்த மாதம் 13ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் குறைந்த விலைக்கு வாங்கிய நிலம் அதிக விலைக்கு விற்பதன் வகைகளில் லாபம் அதிகரிக்கும். புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.
மே – சந்தோஷம் அதிகரிக்கும்
சூரியன் இந்த மாதம் 15ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் தொழில் லாபமும் குடும்ப சந்தோஷமும் அதிகரிக்கும் செவ்வாய் இந்த மாதம் 27ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் உடன் பிறப்புகளால் செலவுகள் அதிகரிக்கும் சுக்கிரன் இந்த மாதம் 27ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் தொழில் உத்தியோகத்தில் வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும். இந்த மாதம் புதன், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.
ஜூன் – முதலீடுகள் அதிகரிக்கும்
இந்த மாதம் சூரியன் 15ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் அப்பாவுக்காக செலவுகள் அதிகரிக்கும் புதன் இந்த மாதம் 03ம் தேதி பதினொன்றாம் இடத்திற்கு வருகிறார் லாபம் அதிகரிக்கும் 18ம் தேதி உங்கள் பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் வியாபார முதலீடுகள் அதிகரிக்கும் சுக்கிரன் இம்மாதம் 29ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் விலை உயர்ந்த பட்டு ஆடை பொன் ஆபரண சேர்க்கைகள் அதிகரிக்கும். இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.
ஜூலை – வாக்கு வன்மை அதிகரிக்கும்
சூரியன் இந்த மாதம் 17ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் அரசாங்க வகையில் விருது கௌரவம் எதிர்பார்க்கலாம் செவ்வாய் 11ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் மனதில் தேவையில்லாமல் கோபமும் எரிச்சலும் அதிகரிக்கும் புதன் இந்த மாதம் 03ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் ஏற்கனவே போட்ட திட்டங்கள் செயல்படுத்துவீர்கள் 21ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் வாக்கு வன்மை அதிகரிக்கும் சுக்கிரன் 26ம் தேதி உங்கள் பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் மனைவிக்காக செலவுகள் அதிகரிக்கும் இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.
ஆகஸ்ட் – நல்லுறவு உண்டாகும்
சூரியன் 17ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும் செவ்வாய் 27ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் மின்சாரம் தொடர்பான தொழிலில் அதிகமான பண வருமானம் உண்டாகும் சுக்கிரன் 21ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் முக வசீகரம் அதிகரிக்கும் ராகு 18ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் எந்த விஷயத்திலும் உடனடியாக முடிவெடுக்க இயலாத மன நிலை உண்டாகும் கேது 18ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் அனைவரிடமும் நல்லுறவு உண்டாகும் இந்த மாதம் புதன், குரு, சனி, பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.
செப்டம்பர் – செல்வ சேர்க்கை
சூரியன் 17ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் உத்தியோகம் தொடர்பான பிரயாணம் உண்டாகும் செவ்வாய் 13ம் தேதி மூன்றாமிடத்திர்கு வருகிறார் சகோதரர்களால் நன்மை உண்டாகும் புதன் 27ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் விற்பனை அதிகரிக்கும் குரு 12ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் புதிதாக வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும் சுக்கிரன் 15ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் செல்வச்சேர்க்கை அதிகரிக்கும் இந்த மாதம் சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.
அக்டோபர் – கல்வி நிலை சிறப்பு
சூரியன் 18ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் அரசு ஒதுக்கீட்டில் வீடு கிடைக்கலாம் செவ்வாய் 30ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் நிலம் வீடு வாங்கும் யோகம் உண்டாகும் புதன் 30ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் கல்வி நிலை சிறப்படையும் சுக்கிரன் 15ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் வீடு மாறும் நிலை உண்டாகும் இந்த மாதம் குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.
நவம்பர் – உல்லாச பயணம்
சூரியன் 17ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண்கள் கிடைக்கும் புதன் 02ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகளில் நல்ல லாபம் உண்டாகும் 24ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் கடன் கொடுப்பதை தவிர்க்கவும் சுக்கிரன் 03ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் வீட்டை அழகுபடுத்தும் நிலை உண்டாகும் 26ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்வீர்கள் இந்த மாதம் குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.
டிசம்பர் – குடும்பத்தில் சச்சரவு
சூரியன் 16ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் அதிகாரிகளுடன் சச்சரவைத் தவிர்க்கவும் சுக்கிரன் 20ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் கணவன் மனைவியிடையே பிரச்சினை உண்டாகலாம் இந்த மாதம் செவ்வாய், புதன், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.