வவுனியா நகர்ப்பகுதியில் 55 பேருக்கு கொரனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வவுனியா சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.
வவுனியா பட்டானிச்சூரில் 7 கொரனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் வவுனியா நகர்ப்பகுதியில் நேற்று முன்தினம் திடீர் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது நகர்ப்பகுதியில் உள்ள வர்த்தகர்கள் அங்கு பணியாற்றுவோர் மற்றும் பட்டானிச்சூர் பகுதியில் இருந்து சட்டவிரோதமாக வெளியேறி வர்த்தக நிலையத்தினை திறந்தவர்கள் என 204 பேருக்கு நேற்று முன்தினம் இவ்வாறு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் இன்று அவர்களுக்கான முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில் 55 பேருக்கு கொரனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் வவுனியா நகரை மீண்டும் முடக்கி அங்குள்ளவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.