ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்குவது தொடர்பில், கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட பிரதிநிதி ஒருவரை ஜனாதிபதி நியமிக்கவுள்ளார்.
ஹம்பந்தோட்டை துறைமுகம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் மற்றும் சீனாவின் சைனா மெர்க்கன்டைல் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு இடையில் கையொப்பமிடவுள்ளது.
இந்த ஒப்பந்தத்தை தயாரிக்கும் குழுவில் ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதி ஒருவரை பெயரிடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
கொள்கை கற்கை நிறுவனத்தின் உறுப்பினரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பொருளாதார ஆலோசகருமான பேராசிரியர் சரத் ராஜபத்திரன இந்த குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
குழுவில் மேற்கொள்ளும் தீர்மானம் தொடர்பில் மிகவும் விரைவில் ஜனாதிபதி தகவல் பெற்றக்கொள்வதே இந்த நியமிப்பின் நோக்கமாகும்.
துறைமுகத்தை சீனாவுக்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் எதிர்வரும் 7ஆம் திகதி கையொப்பமிடவுள்ள போதிலும் அது தொடர்பில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை.
இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சீனாவின் இலங்கை தூதுவர் யீ ஷியென்லினுக்கு இடையில் அண்மையில் சந்திப்பொன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.