Loading...
தெற்கு கடற்படை முகாமில் கடற்படையைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
காலி மாவட்ட தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
கடற்படை வீரர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட ரெபிட் என்டிஜன் பரிசோதனையின்போதே கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Loading...
இலங்கையில் இனங்காணப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 47ஆயிரத்து 840 ஆகும்.
இவர்களில் 40 ஆயிரத்து 838 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளனர். இதனையடுத்து, 6 ஆயிரத்து 539 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதேவேளை தொற்று அறிகுறிகளுடன் சந்தேகத்தினடிப்படையில் 723 தொற்றாளர்கள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
Loading...