ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டைத் தாக்கிய பிலோமினா புயல் காரணமாக நால்வர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நாட்டின் தென் பகுதியில் ஆற்றுநீர் பெருக்கெடுத்ததால் ஏற்பட்ட வெள்ளத்தில், கார் மூழ்கி ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளதுடன் ஏனைய பகுதிகளில் வீடற்ற இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
எனவே பொதுமக்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் கேட்டுக்கொண்டார்.
மேலும் அடுத்த வாரம் ஃபிலோமினா புயல் இன்னும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடுமென வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ள நிலையில் அவசரநிலைச் சேவைகளின் வழிமுறைகளைப் பின்பற்றும்படியும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
பல ஆண்டுகளில் இல்லாத வகையில் ஸ்பெயினில் இம்முறை மிகப்பெரிய பனிமழை பொழிந்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.