உலகளாவிய ரீதியில் சிறந்த சுற்றுலா தளமாக இலங்கை காணப்படுகிறது. 2016ம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற பல்வேறு விடயங்கள் உலகளாவிய ரீதியில் பேசப்படும் பல விடயங்கள் உள்ளன.
வித்தியாசமான மதுபானம், தேங்காய், பாரிய முதலைகள், சிங்கங்கள் போன்ற பல்வேறு விடயங்கள் சர்வதேச ரீதியாக புகழ்பெற்றிருந்தன.
இந்த நிலையில் 2016ஆம் ஆண்டில் இலங்கையில் இடம்பெற்ற 15 வித்தியாசமான விடயங்கள் மற்றும் சம்பவங்கள் பட்டியிலிடப்பட்டுள்ளது.
1. பாரிய முதலை
17 அடியிலான மிக பெரிய முதலை ஒன்று அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. நில்வளா ஆற்றில் இருந்து வெளியே வந்த நிலையில் இந்த முதலை கண்டுபிடிக்கப்பட்டது. ஜப்பானில் வெளியாகும் திகில் படங்களில் உள்ளதனை போன்ற ஒரு பாரிய முதலையே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது.
2. உலகின் மிகப்பெரிய நத்தார் மரம்
உலகின் மிகப்பெரிய நத்தார் மரம் என கூறி தோல்வியில் முடிந்ததே இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டு அண்மையில் திறக்கப்பட்ட நத்தார் மரமாகும்.
3. இலங்கையின் முன்னிலை அரசியல் தலைவரின் இரவுநேர களியாட்ட விடுதியில் மேற்கொண்ட தாக்குதல்
இரவு நேர கேளிக்கை விடுதியில் நாட்டின் முக்கிய பொறுப்பில் இருக்கும் அரசியல் தலைவரின் மகன் இரவுநேர விடுதியின் பாதுகாப்பாளரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.
4. பாலியல் என்ற வார்த்தையை தேடுவதில் முதலிடம் பிடித்த இலங்கை
பாலியல் என்ற வார்த்தையை கூகிள் தேடுதல் பொறியில் தேடுவதில் இலங்கை முதலிடம் பிடித்திருந்தன. இலங்கையில் மேல் மாகாணத்திலேயே அதிகமாக இந்த வார்த்தை குறித்து தேடப்பட்டிருந்தன.
5. தனியார் பஸ் சாரதிகள் பணி பகிஷ்கரிப்பால் நாடு ஸ்தம்பிதம்
தங்களுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தண்ட பணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை பஸ் தனியார் பஷஸ் உரிமையாளர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டினர். அடுத்த வருடம் முதல் 6 விடயங்களை அடிப்படையாக கொண்டு 15000 ரூபாய் தண்டப்பணம் அதிகரிப்பதற்கு வரவு செலவு திட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தன.
6. மீன் விற்பனை – கீல்ஸ் கடல் உணவு பகுதியில் சிக்கிய எலி
கீல்ஸ் சுப்பர் கடல் உணவு பகுதியில் பனிக்கட்டியில் ஒரு எலி சிக்கிய சம்பவம் பலரால் அதிகம் பேசப்பட்ட ஒரு விடயமாகியது. அங்கு மீனுக்கு 44 ரூபாய் என குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் எலிக்கான விலை குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
7. ஒக்ஸ்போர்ட் அகராதியில் சேர்க்கப்பட்ட “ஐயோ”
அண்மையில் ஐயோ என்ற சிங்கள மற்றும் தமிழ் பயன்பாட்டு வார்த்தை ஒன்று ஒக்ஸ்போர்ட் அகராதியில் சேர்க்கப்பட்டிருந்தது.
8. மிரிஸ்ஸ பகுதியில் உள்ள ஹோடல்களுக்கு இலங்கையர்கள் அனுமதிக்க மறுப்பு
மிரிஸ்ஸ பேயில் அமைந்துள்ள பல உணவகங்கள் இலங்கையர்களுக்கு உணவு, பானங்கள் மற்றும் விடுதி வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இலங்கையர்களின் சமூக விரோத நடத்தையே இதற்கு காரணமாகும்.
9. கினியம் ரே பாடல்
இராஜ் என்ற சிங்கள பாடர் வெளியிட்ட கினியம் ரே என்ற பாடல் இலங்கை பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அந்த பாடல் ஓரின சேர்க்கை தொடர்பு பற்றிய ஒரு பாடலாக காணப்பட்டது. அதற்கு சமூகவலைத்தளங்களில் கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தன.
10. பாடசாலை மாணவர்களினால் தாய்மார்களுக்கு விதிக்கப்பட்ட உடை விதிமுறை
இலங்கையின் பிரபல பாடசாலை ஒன்றின மாணவர்கள் குறித்த பாடசாலை மாணவர்களின் தாய்மார்களுக்கு உடை விதிமுறை ஒன்றை விதிக்கும் வகையில் பாடசாலை வளாகத்தில் பதாகை ஒன்று தயாரித்து ஒட்டியிருந்தனர். மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படுவதனால் தாய்மார்கள் தங்கள் ஆடைகளில் கவனம் செலுத்துமாறு குறிப்பிடப்பட்டிருந்தன.
11. மது போதையில் விமானத்தை செலுத்த முயற்சித்த இலங்கை விமானி
ஜேர்மனியின் பிராங்பர்ட் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் விமானத்தின் தலைமை விமானி மதுபான பரிசோதனையில் தோல்வியடைந்ததன் விளைவாக அவரால் விமானத்தை செலுத்த முடியாது போனதாகவும் இதனால் 15 மணி நேர தாமதத்தின் பின்னர் பிறிதொரு விமானியைப் பயன்படுத்தி விமானத்தை இலங்கை நோக்கி செலுத்தி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.
12. தேங்காய் உடைக்க சென்ற இடத்தில் பணப்பையை தொலைத்த கூட்டு எதிர்கட்சி உறுப்பினர்
சீனிகம கோவிலில் அரசாங்கத்திற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினர் தேங்காய் உடைக்கும் நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இதன் போது கூட்டு எதிர்கட்சி உறுப்பினர் ஒருவரின் பணப்பை இனந்தெரியாத நபர்களினால் திருடப்பட்ட சம்பவம் பலர் விமர்சிக்கப்பட்ட ஒன்றாகியிருந்தன.
13. பனாமா பட்டியலில் உள்ளடக்கப்பட்ட இலங்கையர்கள்
வெளிநாடுகளில் சட்டவிரோமாக பண வைப்பு செய்தவர்களின் விபரங்கள் உள்ளடங்கிய பனாமா பட்டியலில் இலங்கையர்களின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டிருந்தன.
14. கிராமப்புற இலங்கைப் பெண்களை அடிமைப்படுத்திய பியோனஸ்
யோகா காலுறை ஊடாக பியோனஸ் என்ற ஆடை நிறுவனம் ஒன்று இலங்கைப் பெண்களை அடிமைப்படுத்தும் சம்பவம் பற்றி சர்வதேச ஊடகமொன்று தகவல் அம்பலப்படுத்தியிருந்தது.
15. இலங்கையில் கிறிஸ்மஸ் கரோல் பாடப்புத்தகத்தில் சர்ச்சைக்குரிய பாடல் வரி
இலங்கையில் அண்மையில் அச்சிடப்பட்டிருந்த கிறிஸ்மஸ் கரோல் பாடப்புத்தகத்தில் Tupac என்பவரின் பாடல் வரிகள் உள்ளடப்பட்டிருந்த சம்பவம் கடந்த நாட்களாக பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தன.