ஸ்பெயினை தாக்கிய பனிப்புயல் காரணமாக இதுவரை 4பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிளோமினா என்று பெயரிடப்பட்ட இந்த புயல் தலைநகர் மட்ரிட் மற்றும் ஸ்பெயினின் மத்திய பகுதிகளை கடுமையாக தாக்கியுள்ளது.
இந்தப் புயல் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகப்பெரிய பனிப்பொழிவுக்கு வழிவகுத்தது. பனிப்பொழிவு காரணமாக வீதிகளில் வாகனங்கள் நகர முடியாமல் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் பல இடங்களில் வீதி போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் பனிப்புயல் காரணமாக மட்ரிட்டில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டு விமான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. அதே போல் மட்ரிட் உட்பட பல பகுதிகளில் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த கடுமையான பனிப்பொழிவு அடுத்த சில நாட்களுக்கு தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.0Shares