இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 3 மரணங்கள் நேற்று (10) பதிவாகியுள்ளன.
இதன்மூலம், மொத்த மரணங்களின் எண்ணிக்கை 232 ஆக உயர்ந்தது.
230வது மரணம்
நீர்கொழும்பு சிறையிலிருந்த 62 வயதான ஆண் கைதி ஒருவர், நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த 08 ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா, என அறிவிக்கப்பட்டுள்ளது.
231ஆவது மரணம்
கொழும்பு 14 (கிராண்ட்பாஸ்) பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயதான பெண் ஒருவர், மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, பிம்புர ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (10) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், புற்றுநோய் நிலை மற்றும் கொவிட்-19 நியூமோனியா, என அறிவிக்கப்பட்டுள்ளது.
232வது மரணம்
இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதான ஆண் ஒருவர், இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று முன்தினம் (09) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா மற்றும் இருதயநோய், என அறிவிக்கப்பட்டுள்ளது.