ஆனால் இது போல பல இன்றியமையாத விட்டமின் சத்துக்களின் அவசியத்தைப் பற்றி நாம் தெரிந்து வைத்திருக்க மாட்ட்டோம். காரணம் மற்ற சத்துக்கள் குறைந்தால் அறிகுறிகள் வெளிப்படும்.
அதனால் மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். ஆனால் கொலைன் என்ற விட்டமின் பற்றி நீங்கள் தெரிந்து வைத்திருக்கிறீர்களா? அதன் முக்கியத்துவம் பற்றி விரிவாக காண்போம்
கொலைன் என்றால் என்ன?
கொலைன் நீரில் கரையும் விட்டமின் பி காம்ப்ளக்ஸ் விட்டமின். கொலைன் நமது உடலிலேயே மிகக் குறைவான அளவு உற்பத்தி செய்யப்படுகிறது. அவை போதாது.
எனவே உணவின் மூலமாக கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். வெறும் 10 % மருத்துவர்களே ஊட்டச்சத்து ஆராய்ச்சியின்படி கொலைன் விட்டமினை பரிந்துரைக்கிறார்கள். அதனால்தான் அதைப் பற்றி நமக்கு தெரிவதில்லை.
கொலைன் வேலை என்ன?
கொழுப்பு, வளர்சிதை மாற்றத்தில் உட்பட வேண்டுமென்றால் கட்டாயம் கொலைன் தேவை. இது கொழுப்பை கரைக்க உதவி புரிந்து ரத்தத்திற்கு மாற்ற உதவி புரிகிறது. கொலைன் குறைந்தால் கொழுப்பு, கொலஸ்ட்ரால் கல்லீரலில் படிந்து கொழுப்புக் கல்லீரல் நோய் உண்டாகும் வாய்ப்புகள் உண்டு.
இதய, மூளை நோய்கள்.
கொலைன் இதய நோய்கள் வராமலும் தடுக்கிறது என ஆய்வுகள் சொல்கின்றன.
அதுபோலவே மூளையை பலப்படுத்த மிக அவசியமான சத்தாகும்.
மார்பக புற்று நோய்
நரம்பு சம்பந்தமான நோய்களுக்கு கொலைன் குறைபாடு காரணமாகும். தேவையான அளவு கொலைன் எடுத்துக் கொள்வதால் மார்பக புற்று நோய் தடுக்கப்படும் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
உணவு
முட்டையின் மஞ்சள் கருவில் அதிக அளவு கொலைன் உள்ளன. தினமும் ஒரு முட்டை சாப்பிடால் அறிவுத்திறன் பலபப்டும் என்பதற்காக காரனம் கொலைன் சத்துதான். அது தவிர சிக்கன், மாட்டிறைச்சி, புரோக்கோலி, சால்மன் மீன் ஆகிய்வற்றில் கொலைன் சத்து உள்ளன