Loading...
திருகோணமலை- ஹொரவ்பொத்தானை பிரதான வீதி கன்னியா கற்குவாரி வளைவில் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்றிரவு (11) 10 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் புல்மோட்டை அரபாத் நகர் பகுதியைச் சேர்ந்த என்சிலூன் முஜிபுர் ரஹ்மான் (29) ஆவார்.
Loading...
உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...