தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த டிசம்பர் மாதம் 5ஆம் திகதி மரணமடைந்தார்.
75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த அவரின் உயிர் பிரிய காரணம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு தான் என அப்பல்லோ நிர்வாகம் கூறியது.
அவரின் 75 நாட்கள் சிகிச்சையின் முழு விபரத்தை அப்பலோ நிர்வாகம் வெளியிடாத நிலையில், தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் என்னும் ஆசிரியர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஜெயலலிதா இறப்பு குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒன்பது கேள்விகள் கேட்டுள்ளார்.
ஆனால் இது குறித்து பதில் தெரிவிக்க முடியாது என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் ராஜ்குமாருக்கு கடிதம் எழுதியுள்ளது.
அதில், அப்பல்லோ ஹாஸ்பிடல் லிமிடெட் இந்திய கம்பெனிகள் 1956 சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதனால் 2005ல் வந்த தகவல் உரிமை சட்டம் கீழ் இது வரவில்லை. அதனால் சிகிச்சை குறித்து நீங்கள் கேட்ட விபரங்களை வழங்க முடியாது என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதே போல தன் சந்தேக கேள்விகளை ராஜ்குமார் கடிதமாக தமிழக கவர்னருக்கும் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.