முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்றும், நேற்று முன்தினமும் மூன்று பெண்கள் கொரோனா தொற்று டன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அழகு சாதன பொருட்கள் விற்பனை நிலையம் ஒன்றை நடத்தி வந்த குறித்த பெண் வவுனியாவில் உள்ள தன்னுடைய அண்ணாவின் வீட்டிற்கு சென்று வந்திருந்த நிலையில் வவுனியாவில் அண்ணாக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த நபர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு பி சி ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட போது அவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது
இதனை தொடர்ந்து அவருடன் தொடர்புபட்டவர்கள் என்ற அடிப்படையில் பி சி ஆர் பரிசோதனைகளில் குறித்த நபருடைய அழகுசாதன பொருட்கள் விற்பனை நிலையத்திற்கு அருகாமையில் இருந்த கடையொன்றில் பணியாற்றுகின்ற கடைக்கு வந்து சென்றிருந்த இரண்டு பெண்களுக்கு நேற்றையதினம் கொரோனா தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டு இருக்கின்றது.
இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 பெண்களிடம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு நகர் பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் பூட்டப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. இருப்பினும் அரச தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் அரச திணைக்களங்கள் வழமை போன்று இயங்கி வருகின்றன.
குறிப்பாக முல்லைத்தீவு நகரில் காணப்படுகின்ற வர்த்தக நிலையங்கள், தெரிவு செய்யப்படும் சந்தையை வர்த்தகர்களிடமும் நிதி நிறுவனங்களின் ஊழியர்கள் என பலரிடம் பி சி ஆர் பரிசோதனைகள் மேற்கொள்கின்ற நடவடிக்கைகள் இன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
தொடர்ச்சியாக ஏற்கனவே முதல் நாளில் தொற்று உறுதியான பெண்ணுடன் தொடர்புடைய சுமார் 30 பேருக்கு மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நிலையில் நேற்று தொற்று உறுதியானவர்களோடு தொடர்பை பேணியவர்களையும் தனிமை படுத்துகின்ற நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்றுவருகிறது. இந்த செயல்பாடு இதுவரை நிறைவு பெறாத நிலையில் அது தொடர்பான புள்ளி விவரங்கள் வெளியிடப்படவில்லை. இருப்பினும் பலர் தனிமைப்படுத்தப்பட்ட கூடிய வாய்ப்புகள் இருப்பதாக தெரியவருகின்றது.